ஊழியர் பற்றாக்குறை – தொல்பொருள் திணைக்களம் பாரிய அசௌகரியங்களை சந்தித்து வருவதாக துறைசார் இயக்குநர் துசித மெண்டிஸ் கவலை!

Sunday, May 5th, 2024

ஊழியர் பற்றாக்குறையால் தொல்பொருளியல் திணைக்களம் தற்போது பாரிய அசௌகரியங்களை சந்தித்து வருவதாக தொல்லியல் துறை இயக்குநர் பேராசிரியர் துசித மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

திணைக்களத்தை நடைமுறைப்படுத்தி செல்வதற்கு 4,316 ஊழியர்கள் சேவையில் காணப்பட வேண்டிய நிலையில் தற்போது 2,757 ஊழியர்கள் மாத்திரமே காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மேலும், 1,559 பேருக்கு சேவையில் இணைய வாய்ப்புகள் உள்ளது. இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தொல்பொளியல் விடயங்கள் தொடர்பில் சில ஊடகங்களில் சில சந்தர்ப்பங்களில் வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை.

சில சிக்கல்கள் இருப்பினும் கூட அதிகளவிலான தொல்பொருள் இடங்களை அழிந்து விட இடமளிப்பதாக சில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: