ஊழியர் நிதியத்தில் வரி அறவிடும் யோசனை பல சந்தர்ப்பங்களில் நிராகரிக்கப்பட்டது – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Thursday, February 10th, 2022

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் வரி அறவிடும் யோசனையை இறைவரி ஆணையாளர் முன்வைத்திருந்த போதிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அதனை நிராகரித்ததாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

மேலும் பாதீடு நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் உள்ள நிதியானது முதலீடு மூலம் பெறப்படும் வருமானம் என கருதப்படுவதால் அதற்கு வரி விதிக்க வேண்டும் என இறைவரி ஆணையாளர் இதற்கு முன்னர் கோரியிருந்தார்.

ஆனால் அது தவறான நிலைப்பாடாகும் என கூறி, குறித்த யோசனை நிராகரிக்கப்பட்டது. அத்துடன் குறித்த வரி அறவிடப்படும் செயற்பாட்டுக்கு தமது அமைச்சும் எதிர்ப்பு வெளியிடுவதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் குறித்து நாடாளுமன்றில் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் அவ்வாறு வரி அறவிடப்படுமாயின் பெருந்தோட்ட மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவர் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: