ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆக மாற்றியமைக்க அமைச்சரவை அனுமதி!
Wednesday, October 5th, 2022
அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் (SOE) பணியாற்றும் ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆக மாற்றியமைக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால பாதீட்டின்போது கட்டாய ஓய்வு வயது 60 ஆக அறிவிக்கப்பட்டது.
அதற்கமைய, 2023.01.01 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அதற்கான ஒழுங்குவிதிகளை விதித்து ஏற்புடைய சுற்றறிக்கை ஆலோசனைகளை வெளியிடுவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மின் கட்டணம் எரிபொருள் விலை தொடர்பாக விலைப் பொறிமுறைமை!
தேசிய உற்பத்தித் திறன் அபிவிருத்தியில் கிளிநொச்சி முதலாம் இடம்!
மூடப்படும் நிலையில் உள்ள வைத்தியசாலைகளில் சேவைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்...
|
|
|


