ஊர்காவற்றுறை பொலிஸ் பொறுப்பதிகாரி யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு மாற்றம்!
Friday, November 4th, 2016
ஊர்காவற்றுறை தலைமைப் பீட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜீ.எஸ்.ஹேவ விதானகே யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய தலைமைப் பீட பொலிஸ் பொறுப்பதிகாரியாக புதன்கிழமை முதல் நியமிக்கப்பட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த ஒரு வருட காலமாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ஜீ.எஸ்.ஹேவ விதானகே பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் உத்தரவிற்கு அமைய யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய வீரசிங்க ஒழுக்காற்று நடவடிக்கையின் பிரகாரம் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

Related posts:
மிக கொடிய விஷத்தன்மை கொண்ட காய்கறிகள் இலங்கையில் உற்பத்தி - அமைச்சர் பி.ஹரிசன்!
சர்வதேச தெங்கு தினத்தை முன்னிட்டு பிரதமர் தலைமையில் 10 நினைவு முத்திரைகள் வெளியீடு!
உதய நகர் கிழக்கில் சிறார்கள் கசிப்பு விற்பனை - பாதுகாத்து தருமாறு மக்கள் கோரிக்கை!
|
|
|
இரண்டு வாரங்களுக்குள் சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் - பணிகள் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ள...
வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதை இனி மேற்கொள்ள முடியாது - அரச அச்சக அதிகாரி கங்கானி கங்கானி லியனகே தெ...
சென்னையிலிருந்து காங்கேசந்துறைக்கு உல்லாசக் கப்பலில் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் ஏற்படுத்த...


