ஊர்காவற்றுறை பிரதேச சிறுகைத்தொழில் தொடர்பில் துறைசார் அமைப்புகளுடன் தவிசாளர் ஜெயகாந்தன் ஆலோசனை!

Thursday, April 5th, 2018

தீவகம் வடக்கு ஊர்காவற்றுறைப்  பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக சிறு கைத்தொழில் துறைகளை உருவாக்கும் நோக்குடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் பிரதேசத்தின் கைத்தொழில் சார் துறையினருடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

வறிய மக்களின் வாழ்வியல் மேம்பாடடையவேண்டும் என்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் எண்ணக்கருவுக்கமைவாக ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளரும் கட்சியின் குறித்த பிரதேசத்தின் நிர்வாக செயலாளருமான மருதயினார் ஜெயகாந்தன் தலைமையில் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊர்காவற்றுறை பிரதேசத்தின் கைத்தொழில் கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகளுக்கும் ஆரம்பக் கைத்தொழிலமைச்சுப் பிரதிநிதிகள் நெக்டா நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

குறித்த சந்திப்பின் போது ஊர்காவற்றுறை பிரதேசத்தின் வளங்களுக்கேற்ப புதிய சுய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கான பல வேலைத்திட்டங்கள் முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

29695101_1728455397193540_3777299552147603456_o

30124791_1728455417193538_3680785258980048896_o

Related posts: