ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் காலத்தில் அவசர நடவடிக்கை: மத்திய வங்கியின் கோரிக்கை!

மத்திய வங்கியின் அனுமதிப்பெற்ற வணிக வங்கிகள் மற்றும் விசேட வங்கிகளை இன்று திங்கட்கிழமையன்று குறைந்தது 2 மணித்தியாலமாவது திறக்கவேண்டும் என்று மத்திய வங்கி கோரியுள்ளது.
காவல்துறை ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் காலத்தில் அவசர வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே தமது கிளைகளை திறக்குமாறு மத்திய வங்கி கேட்டுள்ளது.
எனினும் பொதுமக்கள் பெருமளவில் இணையத்தின் ஊடான கொடுப்பனவு முறைகளை கையாளுமாறு கேட்டுள்ள மத்திய வங்கி, தன்னியக்க இயந்திரங்களில் பணத்தை எடுக்கும்போது குறைந்தளவான மக்கள் இருக்கும்போது அங்கு செல்லமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை வங்கிகள் திறந்திருக்கும்போது பொதுமக்கள் உரிய சுகாதார முறைகளை கையாளுமாறும் மத்திய வங்கி கோரியுள்ளது.
Related posts:
தாய்மார் சேலை அணிவது குறித்த சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்தும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை -கல்...
அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும் - நிதி இராஜாங்க அமைச்சர்!
தேர்தல் பணிகளுக்காக ஆயிரத்து 459 அரச பேருந்துகள் சேவையில் - அரச போக்குவரத்து சபை அறிவிப்பு!
|
|