அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கான கலந்துரையாடல்!

Friday, March 17th, 2017

இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற யுத்த வீரர்கள் மற்றும் ஓய்வுபெறவுள்ள அங்கவீனமுற்ற யுத்த வீரர்கள்களுக்கான கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் பனாகொட இராணுவ முகாமில் எதிர்வரும் 17ம் திகதி  இடம்பெறவுள்ளது. இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற யுத்த வீரர்கள் மற்றும் ஓய்வுபெறவுள்ள அங்கவீனமுற்ற யுத்த வீரர்கள் உள்ளிட்ட 2,000 வீரர்கள் மற்றும் ஊதியம் மற்றும் கொடுப்பனவு பதிவுகள் பணியகம், நலன்புரி நிர்வாக பணிப்பாளர், பணியாளர் நிர்வாக பணிப்பாளர் ஆகிய நிலையங்களில் பணிபுரியும் இராணுவ அதிகாரிகள் ஆகியோரிடையே படைவீரர்களின் நடப்பு விவகாரங்கள் பணியகத்தின் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

 இராணுவத்தளபதி லெப்டினட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் வழிகாட்டல்களுக்கமைய அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் தொடர்பான பிரச்சினைகள், நிர்வாக செயற்பாடுகள், மற்றும் இதர பிரச்சினைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஓய்வு மற்றும் அது தொடர்பான நடைமுறை செயற்பாடுகள் எதுவாக இருந்தாலும் அதற்கான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கபடவுள்ளது. யுத்த வீரர்களின் நலன் கருதி ஒரு நடமாடும் ஆலோசனை வழங்கும் சேவைகளும் இங்கு இடம்பெற இருக்கின்றது.

Related posts: