ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட 20 பேர் கைது!

Saturday, March 21st, 2020

பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல் செய்யப்பட்ட வேளையில் கடல் வழியாக மன்னாருக்கு செல்லமுயன்ற 20 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றதாக கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று பிற்பகல் 2 மணிக்கு புத்தளம், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் ஊடரங்கு சட்டம் அமுல்செய்யப்பட்டது.

இதன்போது பத்தளங்குண்டு பகுதியில் இருந்து படகு மூலம் மன்னாருக்கு செல்ல ஆயத்தமாகவிருந்த 20 பேரே கைதுசெய்யப்பட்டனர்.

மூன்று பெண்கள், மூன்று சிறுமிகள் இதில் அடங்கியிருந்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள் கல்பிட்டி காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் மக்களை கூட்டி சைக்கிள் ஓட்டப்போட்டியை ஒழுங்குச்செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் தம்புள்ள நகர சபை தவிசாளர் ஜாலிய ஒபாதாவும் மற்றும் ஒருவரும் கைதுசெய்யப்பட்டனர் கைதுசெய்யப்பட்ட இருவரையும் தலா ஒருவருக்கு ஒரு மில்லியன் சொந்த பிணையில் செல்ல தம்புள்ளை நீதிவான் அனுமதித்தார்

Related posts: