உள்ளூர் உற்பத்திகளின் நலன்கருதி உள்நாட்டு பால் மாவிற்கான விலை அதிகரிப்பு – இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவிப்பு!
Friday, May 1st, 2020
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மா வகைகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது..
இதனடிப்படையில் ஹைலண்ட், நெஸ்ட்லே மற்றும் பெலவத்த போன்ற பால் மா வகைகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
இதன்படி ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 945 ரூபாவாகவும், 400 கிராமின் விலை 380 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு பால் மா உற்பத்தி நிறுவனங்கள் நட்டத்தில் பால் மா உற்பத்தியை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இந்த விலை அதிகரிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் வழிகள் குறித்து அமெரிக்க தூதுவருடன் அமைச்சர் நாமல் க...
இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் – மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்து!
இலங்கையுடனான நேரடி விமான சேவைகளை ஆரம்பித்தது துருக்கி விமான சேவை நிறுவனம்!
|
|
|


