உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவிப்பு!
Saturday, October 22nd, 2022
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான பிரேரணை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இதன்மூலம்’ தற்போதுள்ள 8,719 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4000 ஆக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென்றே நாட்டு மக்கள் கோரி வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன் உறுப்பினர்களைக் குறைத்து, அதன் மூலம் மீதமாகும் நிதியை நாட்டின் அபிவிருத்தி திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், இதனை காரணமாகக் கொண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் பிற்போடப்பட மாட்டாதெனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


