20 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் – அரசாங்கம் தீர்மானம்!
Saturday, September 26th, 2020
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டத்தில் பல திருத்தங்களை முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தத்தில் நாடாளுமன்றம் நியமிக்கப்பட்ட நாளிலிருந்து நாடாளுமன்றத்தைக் கலைக்க ஒரு வருடத்திற்குப் பிறகு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
எனினும் இதில் மாற்றம் செய்து நாடாளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு இரண்டரை ஆண்டு வரம்பு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தத்தில் மீண்டும் உறுதிமொழியைச் சேர்க்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தனியார் துறை சம்பளம் அதிகரிப்பு சட்ட மூலம் இன்று!
அதிபர் - ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல்!
வரி செலுத்தாதோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதே இறுதி நடவடிக்கையாக அமையும் - நிதி இராஜாங்க அமைச்சர்...
|
|
|


