உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – முக்கிய கலந்துரையாடல்களுக்கு அழைப்பு!

Wednesday, January 25th, 2023

எதிர்வரும் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை வியாழக்கிழமை இந்த கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும், தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அடிப்படைச் செலவீனங்களுக்காக 3 பில்லியன் ரூபாவை வழங்க முடியுமா என்பது தொடர்பில் திறைசேரி இதுவரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவில்லை.

இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான செலவீன மதிப்பீடு சுமார் 9 பில்லியன் என தேர்தல் ஆணைக்குழு கணிப்பிட்டுள்ளதுடன், அதில் 5 பில்லியனை மாத்திரமே விடுவிக்குமாறு கோரியுள்ளது.

இருப்பினும், ஆரம்ப செலவுகளுக்கு சுமார் 3 பில்லியன் போதுமானதாக இருக்கும் என அவர்கள் பின்னர் திறைசேரிக்கு தெரிவித்திருந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related posts:

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இவ்வருடம் தீர்வுகளை அரசு வழங்கும் - பிரதமர் மகிந்த ராஜபக்ச தெர...
2500 வைத்தியர்கள் புதிதாக சேவையில் - சுகாதார அமைச்சு திட்டம் வகுப்பு என சுகாதார அமைச்சின் செயலாளர் த...
அதிகாரத்தைக் கைப்பற்ற சில குழுக்கள் முயற்சி : தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜயவர்தன குற்றச...