உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழு உத்தரவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் செலுத்தும் கட்டு பணத்தை ஏற்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வது அவர்களின் பொறுப்பாகும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்தாயக்க அனைத்து மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் கடிதம் மூலம் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஜனவரி 18 ஆம் திகதி முதல் ஜனவரி 21 ஆம் திகதி நண்பகல் வரை வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தேர்தல் அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
2017 இல் இலங்கைக்கு கூடுதலான முதலீடுகள் - அமைச்சர் மஹிந்த அமரவீர!
இலங்கை மத்திய வங்கி விளக்கம்!
முச்சக்கரவண்டிகளை எரிபொருள் ஒதுக்கீட்டுக்கு பதிவு செய்யும் போது பணம் அறவிடத் தீர்மானம் - இராஜாங்க அம...
|
|