உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுத்தாக்கல் ஆரம்பம்!

Wednesday, December 6th, 2017

248 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னராக கடந்த நவம்பர் 27ஆம் திகதி 93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு தெரிவத்தாட்சி அதிகாரிகளால் வெளியிடப்பட்டது. இதற்கமைய இரண்டு கட்டங்களாக வேட்புமனுக்கள் கையேற்கப்படவுள்ளன.

முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட 93 உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்புமனுக்கள் டிசெம்பர் 11ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். இரண்டாவது கட்டமாக அறிவிக்கப்பட்ட 248 உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்புமனுக்கள் டிசெம்பர் 18ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். ஆயினும் எல்லா உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒரே நாளிலேயே தேர்தல்கள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளனவா என ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஜ...
சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டுபவர்கள் தொடர்பான தகவல்களை வழங்க அவசர இலக்கம் - பொலிஸ் ஊடக பிரிவு அறிவி...
வடக்கின் சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு இந்திய அரசு உதவிகளை செய்யும் - யாழ்ப்பாணத்திற்கான இந்த...