உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தடுத்து வைத்திருப்பதனை இரத்து செய்து திறைசேரி செயலாளருக்கு உயர்நீதிமன்றம் தடை உத்தவு!

2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தடுத்து வைத்திருப்பதனை இரத்து செய்து திறைசேரி செயலாளருக்கு உயர்நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் புதிய திகதி தொடர்பில் தீர்மானிப்பதற்கான கூட்டம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் தற்சமயம் இடம்பெறுகின்றது.
இந்தக் கூட்டத்தில், ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களான எம்.எம்.மொஹம்மட், எஸ்.பி. திவாரத்ன மற்றும் கே.பி.பி. பதிரண ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின், கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விடயங்கள் காரணமாக, மார்ச் 09ஆம் திகதி தேர்தல் இடம்பெறாது என தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இதற்கமைய, தேர்தல் இடம்பெறும் புதிய திகதி இன்று அறிவிக்கப்பட உள்ளதுடன், அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறும் திகதி தொடர்பிலும் தீர்மானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|