உள்ளுர் தொழில்துறை தொடர்ந்து இயங்குவதற்கு அவசியமான மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு சீனாவின் உதவியையும் நாடியுள்ளது இலங்கை!

Saturday, March 19th, 2022

இந்தியாவிடமிருந்து நிதி உதவியை பெற்றுக்கொண்ட பின்னர் இலங்கை சீனாவின் உதவியை நாடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடன்களை செலுத்துவதை ஒத்திவைப்பது தொடர்பிலும், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் இறக்குமதிக்கான கடன் உதவி குறித்தும் இலங்கை சீனாவின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வருடம் சீன வங்கிககளிற்கு இலங்கை 100 மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக செலுத்தவேண்டும்.

நாடு தற்போதைய நெருக்கடியிலிருந்து மீளும்வரை இந்த கடன்களை செலுத்துவதை ஒத்திவைக்க வேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இலங்கையின் உள்ளுர் தொழில்துறை தொடர்ந்து இயங்குவதற்கு அவசியமான மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அவசியமாக கடன் உதவியை சீனாவிடமிருந்து இலங்கை கோரியுள்ளது.

இலங்கை மேலதிக நிதி உதவியை கோரியுள்ளது இரு தரப்பும் இது குறித்து ஆராய்கின்றன என்பதை உறுதி செய்ய முடியும் என சீன தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: