உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கு எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை – இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவிப்பு!

Monday, March 21st, 2022

இறக்குமதி செய்யப்படும் பால் மா உற்பத்திகள் அதிகரித்த போதிலும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கு எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூர் பால் மா உற்பத்திகளை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், “பெல்வத்தை டெய்ரி இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்” தாங்கள் உற்பத்தி செய்யும் பால் மாவின் விலை ஞாயிற்றுக்கிழமை முதல் அதிகரித்துள்ளது.

பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால் மா பக்கெட் ஒன்றின் விலையை 250 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன்படி, 400 கிராம் பால் பவுடர் பக்கெட் விலை 790 ரூபாவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: