உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி!

Wednesday, March 16th, 2022

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை, இன்று மேலும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, 98 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. நேற்றையதினம் அதன் விலை, 100 டொலர் அளவில் காணப்பட்டது.

கடந்த சில நாட்களாக, ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்ற நிலையில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஜப்பான் விஜயம் – சுற்றுலா துறை அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வ...
விசாரணைகள் நிறைவடைவதற்கு முன்னரே பொலிஸாரால் பகிரங்கப்படுத்தப்பட்டது தகவல் - உண்மைத் தன்மை தொடர்பில் ...
கடன் நிலைத்தன்மையை உறுதி செய்யாமல் நாட்டின் பொருளாதாரத்தை நீண்ட கால அடிப்படையில் முன்னெடுத்துச் செல்...