உலகை அச்சுறுத்தும் ‘ஒமிக்ரோன்’ தொற்று – 6 நாடுகளுக்கு பயணத்தடையை அறிவித்தது இலங்கை!

Saturday, November 27th, 2021

மிகவும் வீரியமான தன்மையுடன் அடையாளம் காணப்பட்டிருக்கும் ‘ஒமிக்ரோன்’ கொவிட் வைரஸ் திரிபு உலகளாவிய அச்சுறுத்தல் நிலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல உலக நாடுகள் பயணத்தடையை அறிவித்து வருகின்ற நேரத்தில் இலங்கையும் பயணத்தடை தொடர்பில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள இந்த புதிய கொரோனா வைரஸ் திரிபு காரணமாக, சில நாடுகளிலிருந்துவரும் பயணிகளுக்குத் தடை விதிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, தென்னாபிரிக்கா, பொத்ஸ்வானா, லெசோதோ, நமீபியா, சிம்பாப்வே மற்றும் எஸ்வடினி முதலான நாடுகளிலிருந்து இருந்து வரும் பயணிகளுக்கு, இன்று  27 ஆம் திகதி நள்ளிரவுமுதல் தடை விதிக்கப்பட உள்ளது.

கடந்த 14 நாட்களுக்குள் குறித்த நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டவர்களுக்கு இந்தத் தடை விதிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

அத்துடன் அவசர தேவைகளுக்காக வருகை தர வேண்டியவர்கள் தனிமைப்படுத்லுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவுத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: