காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டமானது உலகத்துக்கு முன்னோடியான திட்டம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டு!
Saturday, May 4th, 2024
பொது மக்களுக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டமானது உலகத்துக்கு முன்னோடியான திட்டம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று(4) நடைபெற்ற உறுமய காணி உரித்து வழங்கும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, முதற்கட்டமாக மகாவலி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாடாளுமன்ற உறப்பினர்களுக்கு 15மில்லியன்!
எல்லைதாண்டிய இந்திய கடற்றொழிலாளர்கள் கைது!
தைப்பொங்கலுக்கு முதல்நாள் தனியார் கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு முழுநேர வகுப்பு!
|
|
|


