உலகிலுள்ள சிறந்த துறைமுகங்களுக்குள் கொழும்புத்துறைமுகமும் இணைவு!!

உலகிலுள்ள சிறந்த 25 துறைமுகங்களுக்குள் கொழும்புத்துறைமுகமானது, தரமுயர்ந்துள்ளது. 2017ஆம் ஆண்டு சர்வதேச எல்பாலைனர்– 2(Alphaliner-2)தரப்படுத்தலுக்கமைவாகவே துறைமுகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.
இத்தரப்படுத்தலுக்கு அமைய 2016ஆம் ஆண்டு உலகிலுள்ள சிறந்த துறைமுகங்களுள் 23ஆம் இடத்தைப் பிடித்திருந்தது. 2015ஆம் ஆண்டு, கொழும்புத்துறைமுகமானது 26ஆம் இடத்திலேயே தரப்படுத்தப்பட்டிருந்தது.
கொழும்புத்துறைமுகத்தினுள் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்ககூடிய சிறந்த சூழலை உருவாக்கியமையே இவ்வெற்றியின் இரகசியமென, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்களை, சந்தித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
Related posts:
உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு நியாயம் கிடைக்க அனைத்துத் தரப்பினரும் அணி திரள வேண்டும் : சமூக ந...
பேக்கரி தயாரிப்பு உணவுகளால் தொற்று ஏற்படாது - ஐ.டி.எச் மருத்துவமனை வைத்தியர்!
நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது குறித்து எதிர்வரும் 25ஆம் திகதியின் பின்னரே தீர்மானிக்கப்படும்: விருப்ப...
|
|