உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் சீனாவின் உலகின் புகழ்பெற்ற இரத்தினக்கல் ஏலத்தில் – இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவிப்பு!

இரத்தினப்புரி – பெல்மடுல்ல பகுதியில் அண்மையில் மீட்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல்லை எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி சீனாவில் இடம்பெறவுள்ள உலகின் புகழ்பெற்ற இரத்தினக்கல் ஏலத்திற்கு முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஜனாதிபதியினால் விசேட விமானம் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
510 கிலோகிராம் நிறையுடைய குறித்த இரத்தினக்கல் 100 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுடையது என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இலங்கை ரூபாவில் இது 2000 கோடி ரூபா பெறுமதியுடையது என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இரத்தினக்கல்லின் ஊடாக இலங்கைக்கு பாரிய அந்நிய செலாவாணி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|