உரும்பிராயில் நாளை விடுதலை வித்துக்கள் தினம் அனுஷ்டிப்பு – ஈ.பி.டி.பி ஏற்பாடு!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் நாளையதினம் ஈழப் போராட்டத்தில் மரணத்த கட்சியின் தோழர்களை நினைவுகூரும் விடுதலை வித்துக்கள் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
தமிழ் இனத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 44 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உரும்பிராயில் உள்ள சிவகுமாரனின் நினைவிடத்தில் மாலை நான்கு மணிக்கு விடுதலை வித்துக்கள் தினம் நடைபெறவுள்ளது.
இதில் ஈழப்போராட்டத்தில் மரணித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை நினைவுகூரி அஞ்சலிமரியாதையும் நினைவு உரைகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரதமர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்புடன் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் !
வரவு செலவுத் திட்டம் தேர்தலை இலக்காகக் கொண்டது அல்ல - மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்செய்யும் வகையில...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொறுப்பின் கீழ் சுற்றாடல் அமைச்சு - வெளியானது அதிவிசேட வர்த்தமானி அற...
|
|