உரத்தடை தொடர்பில் அரசாங்கம் மேலும் கவலையடைந்துள்ளது – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Sunday, September 17th, 2023

உரத்தடை தொடர்பில் அரசாங்கம் மேலும் கவலையடைந்துள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் (15)  கொழும்பில் நடைபெற்ற இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் 33 ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தேயிலை கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு உர மானியங்கள் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும்  எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இந்த கூட்டத்தில் அமைச்சர்களான ரமேஷ் பத்திரன மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோர் கலந்து கொண்டமை    குறிப்பிடத்தக்கது.

இதன்போது நாட்டின் பொருளாதாரத்தில் ஓரளவு ஏற்றம் காணப்படுவதாகவும், அதற்கு தேயிலை கைத்தொழில் நேரடி பங்களிப்பை வழங்கி வருவதாக திரு ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


எதிர்வரும் வாரத்தில் மன்னார் மாவட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை -...
இலங்கையில் வருகிறது புதிய சட்டம் - சட்ட வரைவினை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவு!
வரலாற்றின் சாட்சியமான பாரதியார் சிலையை மாற்றுவது ஆரோக்கியமானதல்ல – இரா செல்வவடிவேல் – அகற்றப்படாது எ...