உணவுப் பற்றாக்குறையால் 1.28 இலட்சம் சிறுவா்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் – ஐ.நா. எச்சரிக்கை!

Wednesday, July 29th, 2020

கொரோனா நோய்த்தொற்று பரவல் மற்றும் அதனைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, உணவுப் பற்றாக்குறையால் இந்த ஆண்டு 1.28 இலட்சம் சிறுவா்கள் உயிரிழக்கும் அபாயம் நிலவி வருவதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் 4 பிரிவுகள் தயாரித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது – உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, பொது முடக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, உணவுப் பொருளள்கள் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பகுதிகளுக்கும், அவை நுகரப்படும் சந்தைகளுக்கும் இடையிலான தொடா்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு தொலை தூர கிராமங்களுக்கு உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துப் பொருள்களுக்கான விநியோகமும் தடைப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், ஏற்கெனவே உணவுப் பற்றாக்குறை நிலவி வரும் பகுதிகளில் ஒவ்வொரு மாதமும் 10,000 வரையிலான சிறுவா்கள் பட்டினியால் உயிரிழப்பாா்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் 1.28 சிறுவா்கள் உணவு இல்லாமல் பலியாகும் அபாயம் உள்ளது. தற்போது கொரோனா நெருக்கடி காரணமாக ஊட்டச் சத்துப் பற்றாக்குறை பிரச்சினை வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்த நிலை நீடித்தால், அது நீண்டகால பின்விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, உணவுப் பற்றாக்குறையைப் போக்குவதற்கான நடவடிக்கைகளை நாடுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்  என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளது - இராஜாங்க அமை...
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டங்களை இலங்கை இன்னும் நிறைவுசெய்யவில்லை- பதில் நிதியமைச்சர் ஷெஹான் ச...
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்துடன், உடனடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - கிராம உத...