உயர் நீதிமன்ற கட்டடத்தில் தீ !
Tuesday, December 15th, 2020
கொழும்பு, புதுக்கடையில் உள்ள நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் ஏற்பட்டிருந்த தீ தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதுகுறித்து ஆராய குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவில் இருந்து எட்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளர்.
Related posts:
வலிகாமம் பகுதியில் மழை!
ஆபத்தை நெருங்கியுள்ளோம் – வைத்தியசாலைகளின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் இடமில்லை - இராஜாங்க அமைச்சர் ச...
படித்த புத்திசாலிகள் இலங்கையில் இருந்து மட்டுமே வெளியேறுகின்றனர் என்று காண்பிக்க எதிர்க்கட்சி முயற்ச...
|
|
|


