மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகளில் வகுப்பு ஒன்றில் 25 மாணவர்களுக்கே இட ஒதுக்கிடு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, June 14th, 2020

நாட்டிலுள்ள பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் வகுப்பறை ஒன்றில் மாணவர்களின் எண்ணிக்கை 25 ஆக மட்டுப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் சுகாதார அதிகாரிகளினால் வழங்கிய தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கமைய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மாணவர்கள் இணைந்து விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அத்துடன் மீள் அறிவிப்பு வரை பெற்றோர் கூட்டங்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 29ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஜூலை ஆறாம் திகதியே மாணவர்கள் பாடசாலைக்கு உள்வாங்குவார்கள் எனவும் கல்வி அமைச்சு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவர் - உயர்கல்வித்துறை இராஜாங்க அமைச்ச...
சீரற்ற வானிலையால் கிளிநொச்சி மாவட்டத்தில் 3440 பேர் பாதிப்பு - , 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ள...
கொடிகாமம் சந்தைக்கு அருகாமையில் உள்ள மரத்தை வெட்டிய விவகாரம் - சாவகச்சேரி பிரதேச சபையினர் நாசகார வேல...