உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!
Saturday, January 7th, 2017
2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக இலங்கை பரீட்கைள் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளம் ஊடாக பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகி 27ஆம் திகதி வரை இடம்பெற்றது.
2016ஆம் ஆண்டு உயர் தரப்பரீட்சையில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 605 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். இவர்களில் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 991 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளும், 74 ஆயிரத்து 614 தனியார் பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
படைப்புழு தாக்கம் - விலங்குகளிற்கு உணவுத் தட்டுப்பாடு!
வெளியேற்றப்பட உள்ள பிரித்தானிய கழிவுகள்!
அத்தியாவசிய சேவைகளுக்காக குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகங்கள் திறப்பு!
|
|
|


