உயர்தர பரீட்சை தொடர்பான வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளுக்கு இன்று நள்ளிரவுமுதல் தடை!
Friday, December 29th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை தொடர்பான கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கைகள் இன்று (29) நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் ஊடாக மாதிரி வினாக்களை விநியோகித்தல் மற்றும் மாதிரி வினாக்களை வெளியிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் அல்லது குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஜனவரி மதம் 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 25 மாணவர்களுக்கு 3 ஏ !
நெடுந்தீவு பிரதேச ஈ.பி.டி.பியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் யாழ்.மாவாட்ட நிர்வாக செயலாளர்கள்...
இலங்கையில் மோசமான சூழல் இல்லை - சுற்றுலாப் பயணிகள் முதலில் விஜயம் செய்யும் நாடு இலங்கை - ஆசிய ஊடக மற...
|
|
|


