உயர்தரப் பரீட்சை மோசடி தொடர்பில் இன்று விஷேட கலந்துரையாடல்!

Tuesday, August 30th, 2016

வெளிமாவட்டங்களுக்கு சென்று கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இன்று விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

கல்வி அமைச்சில் இடம்பெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில் பரீட்சைகள் திணைக்கள மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளின் போது, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த சில மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விஷேட விசாரணைகளை மேற்கொண்டுள்ள பரீட்சைகள் திணைக்களத்தால் இரண்டு அதிபர்கள் தற்காலிக பணிநீக்கமும் செய்யப்பட்டனர்.  இதேவேளை, வெளிமாவட்ட மாணவர்களை சேர்த்துக் கொள்ள இலஞ்சம் வழங்கப்பட்டதாக என்பது குறித்து விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.  எதுஎவ்வாறு இருப்பினும், கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் பரீட்சை தொடர்பான மோசடிகள் குறைவடைந்து காணப்படுவதாக குறித்த அமைச்சு கூறியுள்ளது.

Related posts: