உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரலில் வெளிவரும் – அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவிப்பு!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களை பெறுபேறுகளுக்கமைய செப்டம்பர் மாதமளவில் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
முன்பதாக கொரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியில் உயர்தர பரீட்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
அந்தவகையில் எதிர்வரும் மார்ச் மாதம் சாதாரண தர பரீட்சையை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதன் பெறுபேறுகளை எதிர்வரும் ஜுன் மாதமளவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை 200 ரூபாவை கடந்த அமெரிக்க டொலரின் பெறுமதி!
தேசிய ரீதியில் அல்ல சர்வதேச ரீதியிலும் எமது வீரர்கள் விளையாட்டு துறையில் சாதிக்கும் நிலை உருவாகியுள...
திருநெல்வேலியில் பிரபல பூட்சிற்றிக்கு 150,000 ரூபா தண்டம்!
|
|