தேசிய ரீதியில் அல்ல சர்வதேச ரீதியிலும் எமது வீரர்கள் விளையாட்டு துறையில் சாதிக்கும் நிலை உருவாகியுள்ளது – முன்னாள் தவிசாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Friday, April 2nd, 2021

தேசிய ரீதியாக மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலும் எமது மண்ணிலிருந்து பல வீரர்கள் விளையாட்டுத்துறையில் சாதிக்க வேண்டும் என தெரிவித்துள்ள பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் அதற்கான சிறந்த சந்தர்ப்பம் தற்போது நாட்டில் உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரணையுடன் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் நடத்தும் 34 ஆவது மாவட்ட ரீதியிலான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி  இன்றையதினம் புத்தூர் ஆவரங்கால் மத்தி விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதியாக கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்த வைத்தபின் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

தற்போது நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் இந்த விளையாட்டு நிகழ்வு இன்று சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேதநேரம் எமது மாவட்டம் நீண்டகாலமாக யுத்தத்தின் பிடிக்குள் சிக்கி பல்வேறு துன்ப துயரங்களை சந்தித்துவந்த நிலையில் விளையாட்டு துறையில் சாதிக்க துடிதத்த வீரர்களும் சந்தர்ப்பங்கள் கிடைக்காமல் போன நிலைமை காணப்பட்டது.

ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. நாட்டில் விளையாட்டுத் துறைக்கென சிறந்த ஒரு இளம் அமைச்சர் குறிப்பாக விளையாட்டுத் துறையை மட்டுமல்லாது இளைஞர்களின் கனவுகளையும் நன்கு அறிந்த ஒருவர் இருப்பதால் எமது பிரதேசத்தின் இளைஞர் யுவதிகளினதும் சாதிக்கும் கனவுகள் நனவாக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

அந்தவகையில் இன்று எமது இளைஞர் யுவதிகளுக்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை உங்களிடனம் பெற்றுத்தருவதற்காக பல வழிகளிலும் எமது கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சரமான டக்ளஸ் தேவானந்தா முயற்சிகளையும் ஒத்தாசைகளையும் வழங்க தயாராகவே இருக்கின்றார்.

அந்தவகையில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் பிரகாரம் எமது மாவட்டத்தின் விளையாட்டுத்துறையும் சிறப்பாக கட்டியெழுப்பப்படவுள்ளதால் உங்கள் ஒவ்வொருவரின் திறமைகளும் தேசிய மட்டத்திலல்லாது சர்வதேசத்திலும் மிளிர வழிவகை செய்ய முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: