உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களின் பரீட்சை முடிவுகளை வெளியிடுமொறு கோரிக்கை!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய சுமார் 80 மாணவர்களின் உயர்தரப் பரீட்சை முடிவுகள் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்றும் அம் மாணவர்களின் பரீட்சை முடிவுகளை வெளியிடுமாறும் அப் பிள்ளைகளின் பெற்றோர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
வெளிமாகாணங்களில் இருந்து வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பரீட்சை முடிவுகளே இடை நிறுத்தப்பட்டுள்ளன.
பரீட்சை முடிவுகளை அறிய முடியாமல் மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் எதிர்கால முடிவுகளை மேற்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கிள்றனர். பிள்ளையை உயர் கல்வி கற்க வைப்பது எவ்வளவு பெரிய வேலை என்பதும் இதற்காக நாம் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தோம் என்பது எமக்கே தெரியும். ஆசையோடு பெறுபேறுகளைப் பெறக்காத்திருந்தோம். ஆனால் பெருத்த ஏமாற்றமே மிச்சம் என பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர். எமது பிள்ளைகள் இலகுவாக பல்கலைக்கழகம் அனுப்பும் நோக்கோடு வெளிமாகாணம் செல்லவில்லை. எமது மாகாணத்தில் போதியளவில் உயர் கல்விக்கான வாய்ப்பு இல்லாத காரணத்தினாலேயே வெளி மாகாணத்திற்கு அனுப்பி கல்வியை கற்பித்தோம் எனவே எமது பிள்ளையின் பரீட்சை முடிவுகளை வெளியிடுமாறு பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.
Related posts:
|
|