வலிவடக்கு மக்களின் பிரச்சினைகளை மூடிமறைக்கிறதா கூட்டமைப்பு?

Friday, September 2nd, 2016

இன்றையதினம் யாழ் குடாநாட்டுக்கு வருகைதரும் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனிடம் வலிவடக்கு மக்கள் தமது மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் குறித்த பகுதி மக்களது போராட்டங்களை ஐ.நா பொதுச் செயலாளரது பார்வைக்கு சென்றுவிடாத வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு தடுத்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.

யாழ் பொது நூலக பகுதியில் ஐ.நா சபை செயலாளருக்காக காத்திருக்கும் மக்களிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலக வாகனத்தில் வந்த அதிகாரிகள் சிலர் மக்களிடம் குறித்த நிகழ்வை மாவை சேனாதிராசா தான் தலைமை தாங்கி நடத்தவுள்ளதால் அவரிடம் உங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்துவிட்டு செல்லுங்கள் என்றும் அவர் உங்களது விடயம் தொடர்பாக ஐ.நா செயலாளரிடம் தெரிவிப்பார் என்றும் கூறி மக்களை  அவ்விடத்திலிருந்து அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த காலங்களிலும் தாம் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை நம்பி பல மகஜர்களை கைளித்திருந்ததாகவும் ஆனால் கூட்டமைப்பினர் இன்றுவரை எதுவிதமான தீர்வுகளையும் பெற்றுத்தராது வெறும் ஊடகங்களுக்கான பிரசார அரசியலை  மட்டும் நடத்தி வருவதாகவும் இதனால் இம்முறை தாங்கள் தமது மனுவை ஐ.நா செயலாளரிடம் நேரடியாக கொடுக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

nathaji_250_209 copy

Related posts: