உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு இவ்வாரம் அனுமதி அட்டைகள்!
Monday, July 9th, 2018
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு இவ்வாரம் அனுமதி அட்டைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பரீட்சை அடுத்த மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறும். பரீட்சைக்கான கால அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு மூன்று லட்சத்து 21 ஆயிரத்து 469 பேர் தோற்றுகின்றனர். இதில் இரண்டு லட்சத்து நான்காயிரத்து 446 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர்.
மேலும் பரீட்சையில் வினாத்தாள்களுக்கான வினாக்களை வாசித்து புரிந்து கொள்வதற்காக மேலதிகமாக பத்து நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
Related posts:
தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் காலம் நீடிப்பு
பொருளாதார முகாமைத்துவ சபையை கலைத்துவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு!
இலங்கைக்கு 90 தண்ணீர் பௌசர்களை வழங்கியது சீனா!
|
|
|
தொழிற்சங்கங்களுடன் இணக்கமாக செயற்படுமாறு அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்து!
13 ஆவது திருத்தத்தை உரியமுறையில் அமுல்ப்படுத்த வேண்டும் - மார்ச் 12 இயக்கம் வலியுறுத்த முனைந்தது ஒரு...
கிராமப்புற வசதிகளை மேம்படுத்த 20.6 பில்லியன் ரூபாய் செலவிட அரசாங்கம் தீர்மானம் - அமைச்சர் மஹிந்த அமர...


