உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துகளைக் கேட்டறியும் நடவடிக்கை இன்றையதினம் ஆரம்பம்!
Thursday, February 15th, 2024
உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மக்களின் வாய்மொழி மூலக் கருத்துகளைக் கேட்டறியும் நடவடிக்கை இன்றையதினம் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்காக இதுவரை 30 பேர் பதிவு செய்துள்ளனர்.
இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள மின் கட்டண திருத்தம் மற்றும் இலங்கை மின்சார சபையின் அண்மைய நிதிநிலை அறிக்கையின் அடிப்படையிலான பகுப்பாய்விற்கமைய, தற்போதைய மின்சார கட்டணத்தை 20 முதல் 25 வீதத்தால் குறைக்க முடியும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் மின்சார கட்டணத்தை திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, 3.34 சதவீத கட்டண குறைப்பிற்கான யோசனையை கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி மின்சார சபை முன்வைத்தது.
இந்த யோசனையில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி கடிதமொன்றை அனுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


