உத்தேச நிதிச் சீராக்கல் சட்டமூலத்தில் புதிய பல திருத்தங்களை உள்ளீடு செய்வதற்கு நடவடிக்கை – சட்டமா அதிபர் உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பு!
Wednesday, July 28th, 2021
அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச நிதிச் சீராக்கல் சட்டமூலத்தில் புதிய பல திருத்தங்களை உள்ளீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலத்தினை வலுவிலக்க செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான அரச தரப்பு சிரேஷ்ட சட்டவாதி நிர்மலன் விக்னேஸ்வரன் நீதிமன்றுக்கு இதனை தெரியப்படுத்தியுள்ளார்.
இத்துடன் குறித்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 7 சரத்துக்களை திருத்தம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தேச நிதிச் சீராக்கல் சட்டமூலத்தினை வலுவிலக்க செய்யுமாறு கோரி ஜே.வி.பி, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட தரப்பினர் உயர்நீதிமன்றில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


