ரூ.5 இலட்சம் வரையான பிணக்கை மத்தியஸ்தர் சபைகள் கையாளலாம்!

Tuesday, October 11th, 2016

மத்தியஸ்தர் சபைகள் கையாளும் பணம் தொடர்பான பிணக்குகள் 2 இலட்சத்து 50ஆயிரம் ரூபாவிலிருந்து 5லட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று நடுவர்சபை ஆணைக்குழு தெரிவித்தது.

சில இடங்களிலுள்ள மத்தியஸ்தர் சபையினர் 2லட்சத்து 50ஆயிரத்துக்கு மேற்பட்ட பணத்தொகை பற்றிய வழக்குகளை விசாரிக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் ஆணைக்குழு அவ்வாறு தெரிவித்தது.

இது தொடர்பாக மத்தியஸ்தர் சபையின் தவிசாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலமைப்பீடம் வங்கிகளின் தலமைப் பீடங்களுக்கு அறிவித்துள்ளது. மத்தியஸ்தர் சபைகள் நாடு முழுவதும் பிரதேச  செயலக பிரிவு வாரியாக செயற்படுகின்றன. இரண்டு தரப்பினர் இடையே ஏற்படும் பிணைக்குள் தொடர்பாக மத்தியஸ்தர் சபைக்கு 1ஆம் தரப்பினர் விண்ணப்பிக்கும்போது 2 தரப்பினரும் மத்தியஸ்தர் சபைக்கு அழைக்கப்பட்டு பிணைக்குத்தொடர்பாக 2 தரப்பினரும் இணைக்கப்பாட்டுக்கு வருவதற்கு வகை செய்யப்படுகின்றது.

இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியாத போது இணக்கப்பாடு இன்மை தொடர்பான சான்றிதழ் மத்தியஸ்தர் சபையால் வழங்கப்படுகிறது. இணக்கப்பாடு இல்லை என்ற சான்றிதழைப் பெற்றுக்கொண்ட நிலையில் முறைப்பாட்டாளர் மேல்நடவடிக்கை எடுக்க முடியும். நீதி அமைச்சின் சீழ் செயற்படும் நடுவர் சபைகள் ஆணைக்குழுவின் வழிப்படுத்தலில் செயற்படுகின்றன.

Untitled-4 copy

Related posts:


புதிய ஆட்சியில் உங்களது ஆதங்கங்களுக்கு தீர்வு கிட்டும் - பூவக்கரை மக்கள் மத்தியில் ஐயாத்துரை ஸ்ரீரங...
ஒன்றிணைந்த வீதிப்புனரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக...
சாத்தியமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் - இலங்கை தொடர்பில் இ...