உத்தேச நாடாளுமன்ற தர நிலை சட்டமூலம் அமுல்படுத்தப்பட்டவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர்களை நீக்க முடியும் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!
Wednesday, November 15th, 2023
உத்தேச நாடாளுமன்ற தர நிலை சட்டமூலம் அமுல்படுத்தப்பட்டவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர்களை நீக்க முடியும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விரைவில் தரநிலை சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு முன்பாக பிரதமர் தினேஷ் குணவர்தன இது குறித்து கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கட்சித் தலைவர்களுடன் இடம்பெறும் கலந்துரையாடலின் போது குறித்த சட்டமூலத்துக்கு தேவையான திருத்தங்களை பிரதமர் மேற்கொள்வார் எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வடக்குக்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்கப்படுவதே நன்மை பயக்கும்!
அனைத்து சட்டங்களையும் விட இயற்கையின் சட்டம் பலமானது - பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர!
தடுப்பூசி பெறுவதில் மக்கள் அசமந்தப்போக்கு - சுகாதார அமைச்சர் குற்றச்சாட்டு!
|
|
|


