உத்தியோகபூர்வ சாரதி அனுமதி அட்டைகள் இன்றுமுதல் வழங்கப்படும் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு!

Tuesday, November 15th, 2022

தற்காலிக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவர்களுக்கு இன்றுமுதல் உத்தியோகபூர்வ சாரதி அனுமதி அட்டைகள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் தபால் மூலம் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி சுமார் 600,000 பேருக்கு சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் வழங்கப்படவுள்ளதாகவும், இந்த விநியோகம் சில வாரங்களில் நிறைவடையும் என்றும் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சாரதி அனுமதி அட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டாததால், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்டுநர் உரிம அட்டைக்குப் பதிலாக தற்காலிக காகித உரிம அட்டை வழங்கப்பட்டது.

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்காக 500,000 அட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 500,000 அட்டைகள் எதிர்காலத்தில் நாட்டிற்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:

தபால் மூல மருந்து விநியோகம் இன்றுமுதல் நிறுத்தம் - பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க அறிவிப்பு!
பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று மீண்டும் திறக்கப்பட்டன - முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எ...
சில தனியார் பாடசாலைகள் பின்பற்றவில்லை - கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் குற்றச்சாட்டு...