அமைச்சரவைக் கூட்டத்தை பகிஸ்கரிக்கத் தீர்மானம்!

Tuesday, April 10th, 2018

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டத்தை பகிஸ்கரிப்பதற்கு தீர்மானித்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அமைச்சரைவக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.இந்த அமைச்சரவைக் கூட்டத்தை பகிஸ்கரிப்பது என சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் நேற்று தீர்மானித்துள்ளனர்.கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தற்போதைய நிலைமை குறித்து நாளை மீளவும் மத்திய செயற்குழு கூடி ஆராய உள்ளது.நேற்று மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 வரையில் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியனவற்றின் பொதுச் செயலாளர் பதவிகளில் மாற்றம் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது வாக்களித்தவர்கள் அமைச்சுப் பதவிகளை துறக்க வேண்டுமென கருத்து வெளியிட்டுள்ளனர். எனினும், சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநயாக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க உள்ளிட்டவர்கள் அமைச்சுப் பதவிகளை துறக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.

Related posts:


வெளிவருகின்றது கல்விப் பொது தராதர பரீட்சைப் பெறுபேறுகள்- பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிவ...
ஒக்டோபர் 31ஆம் திகதி அதிகாலைமுதல் நீக்கப்படுகின்றது மாகாணங்களிடையேயான பயணக்கட்டுப்பாடு - இராணுவத் தள...
நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாகவே தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன - அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவி...