சில தனியார் பாடசாலைகள் பின்பற்றவில்லை – கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் குற்றச்சாட்டு!

Saturday, July 1st, 2023

கிளிநொச்சி மாவட்டத்தில் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் மாணவர்கள் அறநெறி பாடசாலைகளில் கலந்து கொள்ளும் பொருட்டு தனியார் பாடசாலைகள் அவர்களின் கற்றல் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்குகின்ற 113 தனியார் கல்விநிலைய நிர்வாகிகளுடன் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மாவட்ட அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் மாணவர்கள் அறநெறி பாடசாலைகiளில் கலந்து கொள்ளும் பொருட்டாக பகல் 12 மணிக்கு முன்பதாக தனியார் பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் சில தனியார் பாடசாலைகள் இதனை பின்பற்றுவதில்லை என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் குற்றம் சுமத்தியிருந்தார்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கும் கல்வி நிலையங்களில் 63 கல்வி நிலையங்கள் பிரதேச சபைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 53 கல்வி நிலையங்கள் பதிவு செய்யப்படாது இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: