உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு பரவக் கூடிய வகையில் சூழலை வைத்திருந்த எட்டுப் பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்!
Saturday, June 4th, 2016
வடமாகாண சுகாதார அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட டெங்குக் கட்டுப்பாட்டு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டுக் கடந்த மாதம் – 26 ஆம் திகதி முதல் மே மாதம் 30 ஆம் திகதி வரை உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இடம்பெற்றன.
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சுன்னாகம் பொலிஸார் ஆகியோர் பத்துக் குழுக்களாகப் பிரிந்து களப் பரிசோதனைகள் மேற்கொண்டனர். இதன் போது வீடுகள், பாடசாலைகள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், வணக்க ஸ்தலங்கள், பொதுவிடங்கள் எனப் பலவிடங்களும் தரிசிக்கப்பட்டன.
மொத்தமாக 1750 இடங்கள் தரிசிக்கப்பட்டது. டெங்கு பரவக் கூடிய ஏதுவான சூழலை வைத்திருந்தமைக்காக எட்டுப் பேருக்கு எதிராகச் சுன்னாகம் பொலிஸாரால் இதன் போது வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மேற்படி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
அரச பாடசாலைகள் அனைத்திற்கும் 30 ஆம் திகதி விடுமுறை!
யாழ் மருத்துவர்களின் முயற்சியால் துண்டிக்கப்பட்ட கை ஒன்பதரை மணி நேர சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது!...
வடக்கில் உள்ள சில தமிழ் கட்சிகளால் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு களங்கம் - பொதுஜன பெரமுன கட்சியின் பொத...
|
|
|


