நாளைமுதல் அரச சேவைகள் மீள ஆரம்பம் – அரச சேவைகள் அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Sunday, January 2nd, 2022

நாட்டில் நாளைமுதல் வழமை போன்று அரச பொதுச்சேவைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்காக அரசாங்கத்தினால் பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், விவசாயம், கைத்தொழில் மற்றும் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட துறைகளின் முன்னேற்றங்களுக்கு அவற்றை உரிய முறையில் நிர்வகிக்க வேண்டும் எனவும் அரச சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

அதன்படி நாளை 3 ஆம் திகதிமுதல் அரச ஊழியர்கள் வழமை போன்று பணிக்கு அழைக்கப்படுவார்கள்.

அந்தவகையில் நாளைக் காலை தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, அரச சேவை பிரமாணம் செய்து, கடமைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

முன்பதாக கொரோனா பரவல் காரணமாக, பல சந்தர்ப்பங்களில் அரசஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டதுடன் அத்தியாவசிய ஊழியர்கள் மட்டுமே கடமைக்கு அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: