உடுப்பிட்டி கிணறொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு!
Monday, July 4th, 2016
உடுப்பிட்டி இலந்தைக் காட்டுப் பகுதியிலுள்ள தோட்டக் கிணறொன்றிலிருந்து இரண்டு கைக்குண்டுகள், 7 மோட்டர் குண்டுகள் என்பன நேற்று ஞாயிற்றுக் கிழமை(03) பிற்பகல்- 3 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித் துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தோட்டக் கிணற்றை கிணற்றின் உரிமையாளர் நேற்றுத் துப்பரவு செய்த போது குறித்த வெடிபொருட்களைக் கண்டுபிடித்து வல்வெட்டித் துறைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் வெடிபொருட்களைப் பாதுகாப்பாக மீட்டனர். நீதிமன்ற உத்தரவு பெற்று இன்று திங்கட்கிழமை(04) இந்த வெடிபொருட்கள் அழிக்கப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
இலங்கைக்கு 162.6 மில்லியன் டொலர்கள் கடன் தொகையை விடுவிக்க IMF முடிவு!
கடற்தொழிலாளர்களுக்கு மீன் உற்பத்தியை அதிகரிக்க நிவாரணம்!
சர்வதேச மகளிர் தினம் இன்று!
|
|
|


