ஈ.பி.டி.பி. அரசியல் ரீதியில் பலம் பெறுவது என்பது மக்கள் பலம் பெறுவதற்கு ஒப்பானது – கட்சியின் தவிசாளர் மித்திரன்!

Monday, June 22nd, 2020

ஈ.பி.டி.பி. அரசியல் ரீதியில் பலம் பெறுவது என்பது மக்கள் பலம் பெறுவதற்கு ஒப்பானது. அந்தப் பலத்தினை பெற்றுக் கொள்ளக் கூடிய பொறுப்பு உங்களின் கைகளிலேயே தங்கி இருக்கின்றது என ஈ.பி.டி.பி. தவிசாளர் தோழர் மித்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிளிநொச்சி பிரதேச பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களுக்குமான சந்திப்பு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வீணைச் சின்னத்தில் இலக்கம் 5 போட்டியிடுபவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கூறுகையில்

தமிழ் மக்கள் தங்களை பீடித்திருந்த யுத்தத்திலிருந்து விடுபட்டு இன்று இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.

2009 ஆம் ஆண்டு முற்பகுதியில் யுத்தம் முடிவுக்குவந்த பின்னர் அழிந்துபோயிருந்த இந்த கிளிநொச்சி மண்ணை அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களது துணையுடன் மீண்டும் தலை நிமிரச் செய்த பெருமை எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களையே சாரும். இதற்கு வேறு எவரும் உரிமை கோரவும் முடியாது.

இத்தகைய பெரும் பணிகள் இன்னும் ஏராளம் இங்கு தேவையாக உள்ளது. இதை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் ஈ.பி.டி.பி. அரசியல் ரீதியில் பலம் பெறுவது அவசியமாகும். அந்த பலமானது மக்களாகிய நீங்கள் பலம் பெறுவதற்கு ஒப்பானது.

அந்தப் பலத்தினை பெற்றுக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் உங்களுக்கு தற்போது கிடைத்துள்ளது. இந்த வரலாற்று பொறுப்பை நீங்கள் இம்முறை முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்று மேலும் தெரிவித்தார்.

Related posts: