நெல் கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை – பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா!

Thursday, March 16th, 2017

இவ்வருடம் பெரும் போகத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்வலு பிரதியமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.

அரசாங்க திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான செய்தியாளர் மாநாட்டில் நேற்று இந்த விடயங்களை பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் 73,500 மெற்றிக் தொன் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் இந்தக் கொள்வனவு 17 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் இடம்பெறும் என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார். விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்வனவு செய்யப்படுவதுடன் மாவட்ட பிரதேச செயலகம் மற்றும் கிராம மட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்பும் இதற்கு பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கீரி சம்பா மற்றும் ஏனைய சம்பா நெல் வகைகள் கிலோ ஒன்று 41 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படும். நாட்டரிசி நெல் கிலோ ஒன்று 38ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படும் என்றும் பிரதியமைச்ர் தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் பீ.எரிசன் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருப்பதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts: