ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஐந்து வேலைத்திட்டங்கள் – உள்ளூராட்சி திணைக்களம்!

மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் அவர்களின் குறித்தொதுக்கப்பட்ட நிதியீட்டத்தினூடாக உள்ளூராட்சி திணைக்களத்தினூடாக ஐந்து வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக உள்ளூராட்சி திணைக்கள அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ஐந்து வேலைத்திட்டத்திற்காகவும் 1.5 மில்லியன் ரூபா நிதி மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் ஊடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்
இதற்கமைவான செயற்றிட்டங்கள் விரைவாக செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் உள்ளூராட்சி திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் கிணறுகள் புனரமைப்பு உட்பட உள்ளூராட்சி திணைக்களத்தினூடாக செயற்படுத்தப்படுகின்ற உதவித் திட்டங்கள் மக்களுக்கு பெரிதும் பயன்பட்டு வருவதாகவும்
கடந்த காலங்களிலும் மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் அவர்களின் குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து உள்ளூராட்சி திணைக்களத்தினூடாக பல செயற்றிட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
|
|