இறக்குமதி செய்ய அதிகாரம் இல்லை – வெப்பத்தை கணிக்கும் கருவி இன்றி பாடசாலைகளை ஆரம்பிக்க தீர்மானம் !
Monday, June 22nd, 2020
வெப்பத்தை மதிப்பீடு செய்யும் கருவிகள் இன்றி பாடசாலைகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உடல் வெப்பதத்தை கணிக்கும் 16 ஆயிரம் கருவிகளை இறக்குமதி செய்ய கல்வி அமைச்சு கேள்வி மனு கோரியிருந்தது.
இந்த நிலையில், அவற்றை கல்வி அமைச்சுக்கு இறக்குமதி செய்ய அதிகாரம் இல்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதனால் சுகாதார அமைச்சு அவற்றை பெற்றுத்தரும்வரை பாடசாலைகளை திறக்காமல் இருக்க முடியாது என்றும் குறித்த கருவிகள் இன்றி கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறைசார் தரப்பினர் தீர்மானித்தள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
இந்த மாத இறுதிக்குள் இலங்கை அணி வீரர்களின் ஒப்பந்தம் கைச்சாத்தாகும்!
ஆசிரியர் வருடாந்த இடமாற்றம் முதலாம் திகதி முதல் அமுல் - இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்!
வேம்படியில் தரம் 6 க்கு தெரிவானோருக்கு முக்கிய அறிவித்தல்!
|
|
|


