கால்நடைகள் உயிரிழந்தமைக்கு அதிக குளிரே காரணம் – ஆய்வு செய்த குழு அறிவித்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Tuesday, December 13th, 2022

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கால்நடைகள் உயிரிழந்தமைக்கு அதிக குளிரே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஆய்வு செய்த குழு நேற்று (12) தமக்கு தொலைபேசியூடாக இந்த விடயத்தை அறிவித்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த சில தினங்களில் மாத்திரம் சுமார் 1,200 கால்நடைகள் இறந்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்தார்.

எனினும், தற்போது வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து கால்நடைகள் இறக்கின்றமை குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் குளிர் காலநிலை காரணமாக இறுதி நிலவரப்படி உயிரிழந்த விலங்குகளின் எண்ணிக்கை 1660 ஆக அதிகரித்துள்ளது.

வடமாகாணத்தில் 691 பசுக்கள் மற்றும் எருமைகள் மற்றும் 206 ஆடுகள் உயிரிழந்துள்ளதாக விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.மேலும், 329 விலங்குகள் நோய்வாய்ப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 555 பசுக்கள் மற்றும் எருமைகள் மற்றும் 108 ஆடுகள் உயிரிழந்துள்ளதாக விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: